Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2023

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு!

முல்லைத்தீவில்  மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவு !அதுவரை எச்சங்கள் அழிவடையாமால்  பாதுகாக்க பொலிசாருக்கு பணிப்பு நேற்று(29) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட  நிலையில்…

பட்டாவில் திரியும் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களை 30.06.23 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டா வாகனத்தில் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூட ஏற்றுக்கொள்ளாத தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் எந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுகம் இல்லாத நிலையில் மக்கள் மத்தியில் பயிணித்து வருகின்றார்கள். அண்மையில் யாழ்ப்பாதணத்தில் தமிழ்தேசிய…

அகழ்வு பணிகள் மூலமாக மூடி மறைக்கப்படகூடிய ஆபத்து இருக்கின்றது!

சர்வதேச கண்காணிப்புடன் அகழ்வுப்பணிகள் மேற்கொண்டால்தான் உண்மைகள் வெளிக்கொண்டுவரலாம்-செ.கஜேந்திரன்! 29.06.23 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராமத்தில் நீர்வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் நீர் விநியோகம் செய்வதற்காக நிலத்தினை தோண்டிக்கொண்டிருக்கும் போது நிலத்தில் இருந்து பெண்போரளிகளது எனசந்தேகிக்கப்படும் உடலங்களின் எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. இந்த இடத்திற்கு சென்ற தமிழ்தேசிaய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள்…

அரசியல் தீர்வு வரமுடியாது பா.உ.சித்தார்த்தன் தெரிவிப்பு!

நான் இப்போதும் சொல்கின்றேன் அரசியல் தீர்வு வரமுடியாது அப்போது ஏன்நாங்கள் பேசுகின்றோம் வரமுடியாது என்பதற்காக பேசாமல் விடமுடியாது அரசாங்கம் எங்களை அழைக்கின்றது பேசவாருங்கள் என்று நாங்கள் போகமல் விட்டால் நாங்கள் தான் தவறான பக்கத்தில் நிற்போம் சர்வதேச ரீதியாக அரசிற்கு மிக இலகுவாக இருக்கும் இவர்கள் பேசவருவதில்லை நாங்கள் எப்படி பேசி தீர்ப்பது என்று? நாங்கள்…

15 ஆயிரத்தில் தகுதியற்றவர்கள் என்றால் உடன் புட்டிசம் அடியுங்கள்!

பயனாளர்கள் தெரிவு தொடர்பில் சமூக நலன்புரி சபையின் வெளீடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். சொந்த காணி விடுவிக்கப்படாத நிலையில் அரசின் உதவித்திட்டமும் கிடைக்கவில்லை என தெரிவித்து  கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்28.06.23 இன்று காலை அரசின் அஸ்வெசும  கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு…

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியுள்ளார்கள் இதன்போது நிலத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இது பெண் போராளிகளின்…

வெளிநாட்டில் இருந்து கொலை அச்சுறுத்தல் முள்ளியவளையில் சம்பவம்!

முள்ளியவளையில் வசித்துவரும் பிரகலாதன் என்பவருக்கு பிரான்ஸ் நாட்டில் இருக்கும் குடும்ப பெண் ஒருவர் ஆட்கள் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் வசித்து வரும் பிரகலாதன் என்பவருக்கு கழுத்து வெட்டி கொலை செய்யவுள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குடும் பிரச்சினைகளுக்கு அடியாட்களுக்கு பணம் அனுப்பி வாள்வெட்டு கும்பலை ஏவி…

மல்லாவி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்இன்றைய தினம் மதியம் (26.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (26) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் ,மல்லாவி திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக…

வற்றாப்பளை கண்ணகி அம்மன்-8 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கான அறிவிப்பு!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வாக்காளர்களை பதிவு செய்தல் தொடர்பானது.மாவட்டச் செயலகத்தில் 15.06.2023 ம் திகதி நடை பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட மேற்படி விடயம் கொண்ட தீர்மானம் தொடர்பானது. அருள்மிகு வற்றாப் பளைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபலான சபையின் யாப்பு என அழைக்கப்படும் உறுதியின் 3 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க கீழ் குறிப்பிடப்படும்…

தமிழர்களின் அரசியல் வாதிகளே குருந்தூர்மலைக்கு எதிர்ப்பு!

தமிழர்களின் அரசியல் வாதிகளே குருந்தூர்மலைக்கு எதிர்பினை வெளியிடுகின்றார்கள் அங்குள்ள தமிழ்மக்கள் எங்களை வரவேற்கின்றார்கள் எங்களுடன் கதைக்கின்றார்கள் என்ற பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குருந்தூர்மலையில் வைத்து தெரிவித்துள்ளார் 21.06.23 அன்று குருந்தூர்மலைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பூசை வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு அதன் பின்னர் ஊடகங்களுக்கு குருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்…