Monday, April 28, 2025
HomeUncategorizedமாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!

மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தின் அலுவலத்தில் இரு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா பத்து இலட்சம் பெறுமதியான இரு சக்கர நாற்காலிகள் 04.10.24 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் காப்பகத்தின் இணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களான அமரர் கைலாசப்பிள்ளை விஜயகுமாரன் அவர்களின் நினைவாக அவரது மனைவி நவமணி அவர்களினால் ஜக்கியஇராச்சியம் மக்கள் நலன் காப்பகத்தின் ஊடாக ஒரு பயனாளிக்கும்
அமரர் வேலுப்பிள்ளை சசிறூபன் நினைவாக அவரின் சகோதரர்களால் மற்றும் ஒருவருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாபெறுமதியான நவீன மின்சார சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையினை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கும்,கிளிநொச்சியினை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கும் இந்த மின்சார சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
இது மக்கள் நலன் காப்பகத்தின் மின்சார சக்கர நாற்காலியா மூன்றாவது நபர்களுக்க வழங்கிவைக்கப்பட்ட பணியா காணப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments