முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் கரடிப்புலவு கிராமத்தில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று(27) இரவு மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது மிதிவண்டியில் இரவு உணவு வாங்கிவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தலையில் பலத்த அடிகாயம் காணப்படுவதால் இவர் மீது திட்டமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பழம்பாசி கரடிப்புலவினை சேர்ந்த 41 அகவையுடைய நாகையா நாகராஜா என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பொலீசார் சம்பவஇடத்திற்கு சென்று உடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த அடிகாயம் காரணமாக இரத்தகசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினை பிரிந்து தனிமையில் வசித்து வந்த நபர்மீது திட்டமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றகோணத்தில் இது ஒரு கொலை முயற்சி என்ற வகையில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.


