முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகின்றது இந்த நிலையில் மக்கள் தங்கள் காணிகளை விரைவாக விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மனுவினை கையளித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் கையளித்துள்ளார்கள்.
அனுரகுமார திஸ்நாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் மக்களின் காணிகளை விடுவிப்பதாக அறிவித்துவந்துள்ளபோதும் இதுவரை கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்ந நிலையில் மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கi எடுக்க வலியுறுத்தி மனுவினை கையளித்துள்ளார்கள்.
வடமாகாண ஆளுனர் வன்னிமாவட்ட பாராளுனமற் உறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலிசமரசிங்க மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு இன்று மனுவினை கையளித்துள்ளார்கள்.
இதன் பின்னர் இந்த மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது
இந்த மக்கள் தொடர்ச்சியாக காணியினை விடுவிக்கசொல்லி கோரிவருகின்றார்கள் இராணுவத்தினால் ஒருபகுதி காணிவிடுவிக்கப்பபட்டாலும் இன்னொரு பகுதி விடுவிக்கப்படாமல் காணப்படுகின்றது கேப்பாபிலவில் காணி ஆவணங்கள் உள்ள இந்த மக்களுக்கான காணிககைள பெற்றுக்கொடுத்து மக்களின் சுமூகமான நிலையினை ஏற்படுத்த இந்த அரசு முயற்சிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

