Thursday, February 26, 2026
HomeMULLAITIVUதமிழரசு கட்சியின் தவிசாளரை மாற்றகோரி ஆர்ப்பாட்டம்!

தமிழரசு கட்சியின் தவிசாளரை மாற்றகோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா வடக்கு மக்களை வஞ்சிக்கும் வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் செல்வி. கிருஷ்ணவேணி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி, எதிர்வரும் 02.03.2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நெடுங்கேணி பொதுச்சந்தைக்கு முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.

இனவாதம் கதைத்து மக்களிடையே பிரிவினையை தூண்டுவதும், அரசியல் லாப நோக்கத்துக்காக வளர்ச்சி திட்டங்களை தடுப்பதும், விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் என தொடர்ச்சியாக தவிசாளர் அவர்கள் விரோத செயல்களை முன்னெடுத்து வருகின்றார்.

தவிசாளர் செல்வி. கிருஷ்ணவேணியால் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும் வவுனியா வடக்கு மக்களே, கிருஷ்ணவேணியை வெளியேற்றுவோம். அணி திரள்வீர்!!

மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்க்கையை அர்ப்பணித்த எத்தனையோ தவிசாளர்களைச் சந்தித்த இந்த பிரதேசசபை, ஒரு தகுதியற்ற – இனவாதம் தூண்டும் குறுகிய மனநிலை கொண்ட ஒருவரிடம் சிக்கியிருப்பது கவலைக்குரியதாகும்.

செல்வி. கிருஷ்ணவேணி உடனடியாக பதவி விலகவேண்டும் எனும் கோரிக்கையோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

அழைப்பு,
நெடுங்கேணி இளைஞர்கள்,
பொது அமைப்புகள்,
பொதுச் சந்தை வியாபாரிகள்,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments