முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் சி.4 வகை வெடிமருந்தினை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு கள்ப்பாடு தெற்கு பகுதியினை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் வெலிஓயாப்பகுதியில் வேலை செய்துவந்த நிலையில் அங்கு அவருக்கு வெடிபொருள் கிடைத்துள்ளது இதனை திருகோணமலையில் உள்ள மீன்பிடிப்பவர்களுக்கு விற்பனை செய்யமுற்பட்டுள்ளார்.
27 அகவையுடை குறித்த குடும்பஸ்தரிடம் இருந்து இரண்டு கிலோ 700 கிராம் சி.4 வகை வெடிபொருட்கள் விற்பனைக்க தயாரான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரும் சான்றுப்பொருட்களும் இன்று(26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை சிறையில் அடைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
