Thursday, February 26, 2026
HomeMULLAITIVUநெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம் குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம் குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு 26.02.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அந்தவகையில் நெடுங்கேணி வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச்சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

அத்தோடு வைத்தியசாலையில் காணப்படும் மிகவும் முக்கியமான பௌதீகவளப் குறைபாடொன்றைச் சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை தம்மிடம் கைளிக்குமாறு வைத்தியரிடம் கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்முறை தமக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைத்தியசாலைக் குறைபாடொன்றை தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments