Friday, February 6, 2026
HomeMULLAITIVUவெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது! 

வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது! 

புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது! மூவரும் 10.02.2026 வரை விளக்கமறியலில் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியிலேயே  மக்களது வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள் களவாடப்பட்டு  இறைச்சிக்காக விற்பனையாகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

அந்த வகையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து நேற்றைய தினம் (02) களவாடப்பட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இருக்கின்ற குப்பை கொட்டுகின்ற பகுதியிலே புதுக்குடியிருப்பு பகுதியில் களவாடப்பட்ட மாடு ஒன்று இறைச்சியாக்கப்பட்டு வெகனார்  வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் வெகனார் வாகனத்துடன் மூவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிசார் இவர்களை இன்று(03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரி தி.ஜனன் கு‌றி‌த்த பகுதியில் மேலும் நான்கு மாடுகளின் மண்டை ஓடுகள்  காணப்பட்டதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது 

எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் கு‌றி‌த்த மூவரையும் 10.02.2026 வரை. அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments