Tuesday, January 27, 2026
HomeMULLAITIVUகுளவிக்கொட்டுக்கு உதவிக்கல்வி பணிப்பாளர் பலி!

குளவிக்கொட்டுக்கு உதவிக்கல்வி பணிப்பாளர் பலி!

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலனி பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளன.

இந்த சமயத்தில் அவ் வீதியால் பயணித்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் மற்றும் 03 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன. 

குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (53 வயது) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 இறந்தவரின் மகன் உட்பட குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 03 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்: –

செபாஸ்டியன்பிள்ளை அந்தோணி ஜார்ஜ், அடெக்கலநாயகி சாலை, உயரப்புலம், ஆனைக்கோட்டை, மணிப்பாய்

(தற்காலிக முகவரி – பழைய காலனி சாலை, மாங்குளம்)

ஜே:ஹெ: 733260211V

தொழில்: – துணை இயக்குநர் தொடக்கப்பள்ளி (மாங்குளம் மண்டலக் கல்வி அலுவலகம்)

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்: –

01). அந்தோணி ஜார்ஜ் பிரின்ஸ்ரூட்

வயது: 16

மாங்குளம் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு மாணவர்

(இறந்தவரின் மகன்)

02). தனராஜ் தாஜீஸ்வர்,

புடி காலனி, மாங்குளம்

வயது: 13

மாங்குளம் மகா வித்யாலயாவில் 8 ஆம் வகுப்பு மாணவர்.

03). லம்போதரன் தேனுசன், புதியகொளனி, மாங்குளம்

வயது: 13

மாங்குளம் மகா வித்யாலயாவில் 8 ஆம் வகுப்பு மாணவர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments