Tuesday, February 3, 2026
HomeMULLAITIVUமுல்லைத்தீவில் யானை வேலி மின்சாரம் தாக்கியதில் 4 அகவை சிறுவன் பலி!

முல்லைத்தீவில் யானை வேலி மின்சாரம் தாக்கியதில் 4 அகவை சிறுவன் பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோதமான யானைக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 4 அகவை சிறவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் 03.02.2026 இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
தனது தாயுடன் பசுக்களுக்காக புல் வெட்டுவதற்கு சென்ற சிறுவன் அருகில் உள்ள காணியின் உரிமையாளர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி ஒட்டுசுட்டான் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள் மின்சார வேலி அமைத்த காணியின் உரிமையாளர் வீட்டில் இல்லாத நிலையில் அவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments