ஐக்கிய இராச்சியம் நொர்போக் பகுதியில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நினைவிற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Freat Yarmouth NR31 OAPஎனும் பகுதியில் Cobham community centre என்ற மண்டபத்திலா புலம்பெயர்ந்த மக்களால் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் கடந்த 27 ஆம் திகதி நினைவிற்கொள்ளப்பட்டுள்ளதுதமிழிழ தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் மண்டபத்திற்குள் நடைபெற்றது
தேசிய கொடியினை முன்னைநாள் ஜேர்மன் வடமாநில பொறுப்பாளரும் முன்னாள் போராளியுமான ம.கிருபாகரன் ஏற்றிவைத்தார் மாவீரர்களுக்கு பொது சுடர் ஏற்றப்பட்டது டன் அனைத்து மாவீரர்களின் திருவுருவபடங்களுக்குமான மலரஞ்சலி இடம்பெற்றது அனைத்து மாவீரர்களின் நினைவாக தீபங்கள் ஏற்றப்படாடதுடன் தமிழ் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வானது இறுதியுத்ததாதில் வலிந்து காணமலாக்கப்படாடோர் சிலர் தொடர்பில் கண்கண்ட சாட்சியாக தற்போது நொர்போக் பகுதியில் வசித்து வருபவரும் கடற்கருமாபுலி மாவீரன் மேஜர் நல்லமுத்து அவர்களின் சகோதரருமான திரு கார்த்திகேசு சிவகுமார் அவளர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.