முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு சிரச,சக்தி ஊடக வலையமைப்பு ஊடாக தொன்பகுதி மக்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்க்பபட்டுள்ளது.
துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட உயிலங்குளம் ;,கோட்டைகட்டியகுளம்,தென்னியங்குளம்,அம்பலப்பெருமாள்குளம்,அமதிபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு தென்பகுதி மக்களால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
04.12.24 அன்று இந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்
