அதிஸ்டம் விழுந்துள்ளது என கூறி வங்கியில் பணம் வைப்பு செய்து காட்டுங்கள் உங்களு பணம் தருகின்றோம் என டயலக் நிறுவனம் என்று சொல்லிய நபர்களின் பேச்சினை கேட்டு தனது வங்கி கணக்கில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தினை வைப்பு செய்த மறுகணமே பணம் பறிபோயுள்ள சம்பவம் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் புதறிகுடா என்ற கிராமத்தில் வசிக்கும் குடும்ப பெண் ஒருவருக்கு நடந்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கு உட்பட்ட மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களை குறிவைத்து பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது இதற்கு மக்களின் விளிப்புணர்வு இல்லாத நிலையம் காரணமாக அமைகின்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை,புதறிகுடா கிராத்தில் வசிக்கும் குடும்ப பெண் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.
உங்களுக்கு டயலக் நிறுவனத்தினால் இரண்டு இலட்சம் ரூபா பணம் அதிஸ்டம் விழுந்துள்ளது நீங்கள் டயலக் அலுவலம் சென்று எடுக்கப்போறீர்களால அல்லது உங்கள் வங்கிக்கு சென்று எடுப்பீர்களா என்று தொலைபேசி ஊடாக கேட்டதற்கு..
அதிஸ்டம் விழுந்துள்ளது ஏன்ற சந்தோசத்தில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் வங்கி அருகில் உள்ளது டயலக் அலுவலகம் முல்லைத்தீவில் உள்ளது வங்கிக்கு போடுங்கள் என்று சொல்லியுள்ளார்.
இதற்கு உங்கள் வங்கிக்கு போடுவதாக இருந்தால் நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கில் இரண்டு இலட்சம் ரூபா பணம் வைப்பிலிட்டு காட்ட வேண்டும் என்றுகூறியுள்ளார்கள தொலைபேசி கொள்ளையர்கள்.
இதற்கு அந்த பெண் நான் உடனே போட்டு காட்டுகின்றேன் என்று காலை 10.30 மணிக்கு வங்கிக்கு சென்று பணத்தினை வைப்பிலிட்டுவிட்டு அழைப்பிற்காக காத்திருந்துள்ளதுடன் வங்கியின் கணக்கு மீதியினையும் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
பின்னர் 11.30 மணியளவில் வங்கியில் வைப்பிலிட்ட பணத்தினை எடுப்பதற்காக வங்கிக்கு சென்று வங்கி புத்தகத்தினை பார்த்தபோது அதில் ஒரு மணிநேரத்திற்கு முன்னர் வைப்பிலிட்ட பணத்தினை காணவில்லை பணம் எடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அதிர்சியடைந்த குறித்த பெண் வங்கி முகாமையாளரிடம் முறையிட்டு தெரியப்படுத்தியபோது அவர்கள் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறு சொல்லியுள்ளார்கள் இதற்கமைய முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வறுமைக்குட்டபட்ட மக்களை எவ்வாறு ஏமாற்றி பணமோசடி செய்யமுடிமோ அவ்வாறெல்லாம் ஏமாற்றி பணமோசடி செய்யும் கும்பல் இன்றும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள்.
என மக்களே நீங்களும் விழிப்பாக இருங்கள் உங்களுக்கும் அதிஸ்டம் விழுந்துள்ளது என்று தொலைபேசி அழைப்பு வரலாம் அல்லது உங்கள் வங்கி கணக்கு இலக்த்திற்கு பணம் வைப்பிலிட்டும் காட்டுவார்கள் அல்லது உங்கள் தொலைபேசிக்கு ஓ.ரிகோட் வரும் தயவுகூர்ந்து அவ்வாறான உங்கள் தகவல்கைள தொலைபேசியூடாக வழங்காதீர்கள் .