யாழ்-பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட கச்சார்வெளி,செல்வபுரம் வேம்படிதேனி கிராமத்தில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்கள் கிராமச சேவகர் ஊடாக இனம் காணப்பட்டு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
03.12.24 இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்
லண்டனில் வசிக்கும் கச்சார்வெளி பளையினை சேர்ந்த சமூகசேவையாளரான நடேசபிள்ளை காந்தரூபன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் 50 குடும்பங்களு தலா 5ஆயிரம் பெறுமியான உலர் உணவு பொதிகளும் தலா இரண்டு தேங்காய்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்,கிராமசேவையாளர்,அரச திணைக்கள உத்தியோகத்தர்களுடன் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.