முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாததற்கு காரணம் இந்த இரண்டு கட்சிகளும் தான் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் தெரிவித்துள்ளார்.
உபதவிசாளர் அரச அதிகாரியினை அச்சுறுத்தியாக வெளியான செய்தி தொடர்பில் அதன் உண்மை நிலைப்பாடு தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்.
தனது வட்டாரத்தில் வீதி அபிவிருத்தி செய்வதற்காக யே.சி.பி இயந்திரத்தினை கடந்த ஞாயிற்று கிழமை தொடக்கம் பிரதேச சபை செயலாளரிடம் கேட்டிருந்தேன் இந்த இயந்திரம் எனக்கு கொடுக்கப்படவில்லை
மக்கள் எனது கிராமத்தில் என்னை வீதி அபிவிருத்தி செய்யவேண்டும் மின்விளக்கு பொருத்தவேண்டும் என அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே பிரதேச சபைக்கு அனுப்பினார்கள் பிரதேச சபை இயந்திரம் வழங்கவில்லை என்பதற்காக அபிவிருத்தி வேலையினை செய்யாமல் விடவில்லை நான் அந்த இடத்தில் வேறு இயந்திரம் ஒன்றினை பிடித்து வீதி அபிவிருத்தி பணியினை முன்னெடுக்க முயற்சி செய்தேன்.
இந்த நிலையில் நான் வீதி அபிவிருத்தி வேலைசெய்யும் இடத்திற்கு குறித்த அதிகாரி உத்தியோகத்தர்களையும் அழைத்துக்கொண்டு வந்து மறிக்கவந்துள்ளார் அந்த இடத்தில் நான் அவருடன் நீங்கள் கனரக இயந்திரம் தரவில்லை செய்யும் எங்களைஎன்றாலும் விடுங்கள் என்று கதைத்தேன் அதற்காக அதிகாரிக்கு அடிக்கவோ கொலை அச்சுறுத்தலோ நான் விடவில்லை இதுதான் உண்மைச்சம்பவம். எனது மக்களுக்கான அபிவிருத்தி முயற்சியினை தடைசெய்யும் நோக்குடனோய அரச அதிகாரி நடந்துகொண்டுள்ளார்.
பிரதேச செயலத்தினால் செப்பனிடப்பட்டுக்கொண்டிருக்கும் வீதிக்கு வடிகால் (கான்) வெட்டுவதற்காகவே பிரதேச சபையிடம் நான் கனரக இயந்திரத்தினை கேட்டுக்கொண்டேன்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கதிடம் ஒப்படைத்துள்ளமையினை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் நாங்கள் மக்களின் அபிவிருத்திக்காக வந்தோம் அனுர தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துவருகின்றார் இந்த நிலையில் எங்கள் கிராமத்திற்கும் அபிவிருத்தி செய்வார் என்ற நம்பிக்கையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை நாங்கள் கொடுத்துள்ளோம்.
இங்குள் இரண்டு தமிழ்கட்சிகளும் தங்கள்கட்சியினை வளர்பதில்தான் குறியாக இருக்கின்றார்கள் மக்களுக்கு சேவை செய்யசெய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை கட்சியும் அவர்களும் அவர்களின் வளச்சியும்தான் நோக்கம்.
நான் சம்பளத்திற்காக சபைக்கு வரவில்லை எனக்கு கொடுக்கும் சம்பளமும் தேவையில்லை நான் மக்களுக்கான சேவையினையே முதன்மையாக கொண்டு செயற்படுபவன்.
முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாததற்கு காரணம் இந்த இரண்டு கட்சிகளும் தன்னைத்தான் வளர்த்ததும் கட்சியினை வளர்த்ததும் மக்களை ஏமாத்தியதும்தான் மிச்சமாக மிஞ்சியது இவ்வாறான கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரால்தான் இனி நடைபெறும் அபிவிருத்திகள் தடங்கலாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரதேச சபைக்கு மோட்டர் கிறைண்டர் தல்லாம் என்று சொல்லியுள்ளது வீதிகள் அமைத்து தல்லாம் என்று சொல்லியுள்ளார்கள் இவற்றை எல்லாம் நிப்பாட்டுவதற்காகத்தான் சங்கும் வீட்டுச்சின்னத்துடனும் இணைந்து செயலாளர் திட்டம் போடுகின்றார்
ஒரு அரச உத்தியோகத்தர் அரசியல் வேலைகளை செய்யமுடியாமா? செயலாளர் தவிசாளரை அவரின் வேலையினை செய்யவிடுவதில்லை செயலாளர் முடிவெடுத்துதான் செய்கின்றார் சபையின் சார்பான விடையங்கள் எதுவும் நடைபெறுவதில்லை செயலாளரின் தீர்மானத்திற்கு ஏற்றவகையில்தான் சபை நடக்கின்றது.
