முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் அநாகரீகமாக நடந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏனைய சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பில் சபை உறுப்பினர்களினால் கையெழுத்து வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்று பிரதேச சபையின் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கையில்
சபை அமர்வின் போதும் அதன் பின்பும் அநாகரிக நடத்தை
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் 31.12.2025 அன்று நடைபெற்ற சபை அமர்வின்போது அனைத்தும் தலைமை அதிகாரியாக நேரடியாக பார்த்து அவதானித்தவை என்பதை தாங்களும் உணர்வீர்கள் நாங்கள் அறிவோம்.
சபை அமர்வுகளில் வாத பிரதிவாதங்கள் வருவது வழமையும் தேவையானதுமே. ஆனால் அதன் முடிவில் வன்முறை அல்ல மக்களுக்கான ஆரோக்கியமான சேவையாகவே அமையவேண்டும் இதற்காகவே மக்கள் எங்களை அனுப்பியுள்ளார்கள் அன்றைய கூட்டத்தில் கௌரவ உறுப்பினர் சயான் அவர்கள் எம்மோடு வன்முறையாக நடந்துகொண்டார். அநாகரிகமான முறையில் மேசைக்கு மேலாக பாயந்து கண்ணாடி குவளையினை உடைத்து தாக்கமுற்பட்டுள்ளார் சபைக்கு சொந்தமான பொதுச்சொத்துக்களை
வேண்டும் என்றே சேதப்படுத்தியுள்ளார் இதனை தவிசாளர் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தீர்களே தவிர இதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
என்பதுடன் எதிர்வரும் 20.01.2026 அன்று கரைத்துறைப்பற்று பிரதேச சபை கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது நாங்கள் சபையில் கலந்துகொள்வதாயின் எங்களுக்கான பாதுகாப்புக்கு யார்பொறுப்பு மீண்டும் வன்முறை ஏற்படாது என்பதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கைககள் எவை? அல்லது மீண்டும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதா நல்லதோ கெட்டதோ சபையை வழிநடத்துகின்ற தவிசாளரிடம் காணப்படுவதால் இதற்கு சரியான பதில்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று 10 உறுப்பினர்கள் கையெழுத்து வைத்த கோரிக்கை மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவானது பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் முல்லைத்தீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது


