பிரதேச சபை செயலாளரை அவமதித்து பேசிய உபதவிசாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரை மக்கள் மத்தியில் அவதூறாக பேசிய தாக்க முயற்சித்த உப தவிசாளரின் நடவடிக்கை குறித்து உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை பேசுபொருளாக காணப்படுகின்றது
இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜக்கியமக்கள் சக்தி கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு றிசாட்பதியூதீன் அவர்களின் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள யோகேஸ்வரன் அனோஜன் என்ற மக்கள் பிரதிநிதி கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளராக செயற்பட்டு வருகின்றார்.
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளராக இராஜயோகினி ஜெக்குமார் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
இன்று (08) குமாரபுரம் பகுதியில் பிரதேச செயலகத்தால் தற்காலிகமாக வீதி புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது ஒப்பந்த தாரர்களுக்க அந்த வீதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதேச சபையின் ஜே.சி.பி இயந்திரத்தினை குறித்த உபதவிசாளர் குறித்த பகுதிக்கு தேவை என கோரியுள்ளார் இந்த வீதி ஒப்பந்த வேலை என்ற காரணத்தினால் கனரக இயந்திரத்தினை கொடுக்கமறுத்துள்ளார்
பிரதேச சபையின் வேலைக்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுமாயின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் பார்வையிட்ட பின்னரே இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வீதியினை பார்வையிடுவதற்காக பிரதேச சபையின் செயலாளர் சென்றுள்ளார் அந்த இடத்தில் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலர் நின்ற வேளை உபதவிசாளரும் குறித்த இடத்தில் நின்று பிரதேச சபை செயலாளரை அவதூறாக பேசியதுடன் பெண் அதிகாரி என்று பார்க்காமல் அடிப்பதற்கும் முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உபதவிசாளரின் இந்த நடவடிக்கை தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன்
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதுடன் பெண்அதிகாரியினையும் தாக்கமுற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

