முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று(11.01.2026) இரவு 8.30 மணியளவில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 8 துப்பாக்கி ரவகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேராவில் இளங்கோபுரம் பகுதியினைசேர்ந்த 38 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த துப்பாக்கி ரவைகள் தேராவில் காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த துப்பாக்கி ரவைகளின் வெடி மருந்தினை மீன்பிடி நடவடிக்கைகக்காக பயன்படுத்த எடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரையும் சான்றுபொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் மேலதிக விசாரணை நடவடிக்கையிலும் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
