முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதனை தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள்.
மனுவில் உள்ள முக்கிய கோரிக்கையாக..
டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர்களுக்கும்,தாதியர்களுக்கும் நீங்கள் தொடர்ந்தும் அரசாங்க சேவையில் அமர்த்த அனுமதிக்கின்றீர்காள?
அரசாங்க கோவைகளை அழிக்கவோ.கிழிக்கவோ,காணாமல் ஆக்கச்செய்யவோ உங்கள் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளீர்களா?
தொடர்ந்து இவ்வாறான நீதி நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படும் வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
வைத்தியசாலையை திறம்பட நடத்துவதற்காக கொலைச்சம்பவங்கள் நடைபெறாதிருக்க பாதுகாப்பான தரமான சிகிச்சை முறைவ வழங்க பணிப்பாளரின் எதிர்கால திட்டங்களை மக்களுக்கு தெளிவு படுத்தவும்.
சிற்றூழியர்கள் தாதியர்கள் அரசாங்க கடடைகளுக்கு ஒழுங்காக சமூகமளிக்கின்றார்கள் என்பதனை கண்கூடாக அவதானிக்கின்றோம் ஆனால் 15 நாட்கள் வேலைசெய்யும் வைத்தியர்களுக்கு முழுமாத சம்பளம் மேலதிகநேரகொடுப்பனவு வழங்கப்படுகின்றது எந்த அனுமதியும் இல்லாமல் விடுமுறைகளை எடுக்கின்ற வைத்தியர்களுக்கு முழு மாத கொடுப்பனவையும் பெறுவதற்கு ஏன் துணைபோகின்றீர்கள்?
கண்சிகிச்சை பிரிவில் கிழமையில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் நடைபெறுகின்றது ஆனால் வைத்தியசாலையினை நம்பி மாவட்டத்தில் உள்ள மக்களும் அந்த சேவையினை நாடிவருகின்றார்கள் எனவே தினமும் கண்சிகிச்சை பிரிவு செயற்பட கோரிநிக்கின்றோம்.
வைத்தியர்கள் கடமை நேரத்தில் அலுவலகத்தில் நிற்பதை உறுதிப்படுத்தல்வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிகள்
சுகாதாரஅமைச்சர்,சுகாதார பணிமனை செயலாளர் நாயம்,வடமாகாண ஆளுனர்,மாவட்ட செயலாளர், செயலாளர் வடமாகாண சுகாதாரசேவைகள் பணிமனை,பிராந்திய சுகாதாதார சேவைப்பணிப்பாளர்முல்லைத்தீவு,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது மனுவிii கையளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நளின் பிரேமதாஸா அவர்கள் வைத்தியசாலையின் வாயிலுக்கு வருகை தந்துள்ளார் மனுவினை கையளித்த பின்னர் போராட்ட காரர்களுக்கு சிறுமி உயிரிழப்பு போராட்ட காரர்களுக்கு விளக்கமளித்துள்ளர்.
சிறுமி உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வடமாகாண சுகாதார திணைக்களம் இது தொடர்பில் ஆறுபேர் கொண்ட குழு 12 மணிநேரம் விசாரணை செய்துள்ளார்கள்.
அவர்களின் அறிக்கை வந்ததன் பின்னர்தான் சரியான முடிவு சொல்லமுடியும் என்றும் தற்போது இரண்டு மருத்துவர்களை தற்காலிகமாக நிப்பாட்டியுள்ளதாகவும் போராட்ட காரர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்து கவனயீர்ப்பினை நடத்திய போராட்டகாரர்கள் மனுக்களை அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிவிட்டு கலைந்து சென்றுள்ளார்கள்.












