குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறையில் இருந்து புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்ஸ்தர் உயிரிழப்பு!
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 26.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்த குறித்த குடும்ஸ்தர் கடந்த 10.12.2025 குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID)கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது அவர் தாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்த நிலையில் சிறைச்சாலையில் அவர் 26.11.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
