Sunday, December 28, 2025
HomeMULLAITIVUமுல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்ட மணல் சுறண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்ட மணல் சுறண்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட பாரிய மணல் வளச்சுறண்டல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது

இங்கு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பயன்படுத்தாமல் வெளிமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

இந்த நிலையில் மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்காமல் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கும் கனியவளத்திணைக்களத்தின் நடவடிக்கையினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் மணல் அகழ்வு ஒப்பதந்தாரரான மகாலிங்கம் தயாபரன் குறிப்பிட்டுள்ளார்.

உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களும் அனுமதிவழங்கியபோதும் கனியவளத்திணைக்களம் தனக்கான அனுமதியினை வழங்கவில்லை இதற்கு முன்னர் வேறு இடங்களில் தனக்கான அனுமதி வழங்கப்டப்ட நிலையில் கனியவளத்திணைக்களத்தினால் தனக்கு அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடமாகாண கனியவளத்திணைக்களத்தின் பணிப்பாளரின் உறவு முறையான ஒருவருக்கு உடையார்கட்டு பாவாடைக்கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

தனது அதிகார செல்வாக்கினைபயன்படுத்தி தனது உறவினர் ஒருவருக்கு  வழங்கியுள்ளமை இந்த ஆட்சியிலும் ஊழல் தொடர்கின்றது என்பதை ஊடங்களை அழைத்து தெரியப்படுத்தியுள்ளதுடன் உடையார்கட்டு குளத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருக்கும் மணல் கும்பிகளையம் அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.

இதுவரை பாவாடைக்கல்லாறு பகுதியில் இருந்து 500 டிப்பர் வரையான மணல்கள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 200 டிப்பர் மணல்கள் குறித்த பகுதியில்  குவிக்கப்பட்டுள்ளன

சாதரண ஒரு ஒப்பந்ததாரர் செய்யமுடியாத வேலையினை இந்த ஒப்பந்ததாரர் செய்வதற்கு கனியவளத்திணைக்களத்தின் பணிப்பாளர் அனுமதிவழங்கியுள்ளார்.

செல்வாக்கின் அடிப்படையிலேயே இங்கு மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது  ஆற்று மணலினை அகழ்ந்து ஏற்றிக்கொண்டுவந்து ஒரு இடத்தில் கொட்டுவதற்கு உழவு இயந்திரம் ஒன்றிற்கு இருபத்தி ஜந்தாயிரம் ரூபாவும்,அந்த இடத்தில் இருந்து டிப்பருக்கு 60தொடக்கம் 65 ஆயிரம் வரையும் மணலுக்கான பெறுமதி கொடுக்கின்றார்

டிப்பர் காரர்கள் இதனை யாழ்ப்பாணத்திற்கு 95 ஆயிரம் ரூபாவிற்கு கொண்டு சென்று கொடுக்கின்றார்கள் இதில் உழவியந்திரகாரர்களும் டிப்பர்காரர்களுக்கும் உரிய பெறுமதியில் பணம் வழங்கப்படவில்லை மணலுக்கான ஒரு விலைக்காட்டுப்பாடு இங்கு இல்லை
இவ்வாறு உடையார் கட்டுகுளத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு மணல் ஏற்ற செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் அங்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது கனியவளத்திணைக்கள அதிகாரியின் செல்வாக்கினை காட்டி நிக்கின்றது

இதேவேளை குறித்த மணல் அனுமதிப்பத்திரத்தினை வேறு மாவட்ட டிப்பர் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் கூட நடைபெற்றுள்ளது.

நேற்று (27) கிளிநொச்சி கல்லாற்று பகுதியில் 4 டிப்பர்கள் இடம் மாறி மணல் ஏற்றியதற்காக  பொலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாங்கள் செய்தால் எங்களின் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரத்தினை கனியவளத்திணைக்களத்தினர் இரத்து செய்துவிடுவார்கள் பணிப்பாளரின் உறவினர் என்ற காரணத்தினால் இதனை கண்டுகொள்ளதாக நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டுபகுதினை  சேர்ந்த பலரின் பெயர்களின் மணல் அகழ்விற்கான அனுமதியினை பெற்று ஒரு தனிநபர் அனைத்தினையும் கையாண்டு மணல் வியாபாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்

இவ்வாறு வடமாகாண கனியவளத்திணைக்களம் ஊழல் நிறைந்த ஒரு திணைக்களமாக காணப்படுகின்றது என்றும் இதனை இந்த அரசாங்கம் ஆய்வுக்குட்படுத்தி விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments