முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை ஒன்றினை வடமாகாண பொலீஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சிலாவத்தை சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்க நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் 29.12.2025 அன்று காலை மாபெரும் நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள்,சுகாதார பணியாளர்களுக்கும்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளையதினம்(29) மருத்துவமனையின் செயற்பாட்டினை உறுதி செய்ய பாதுகாப்பு ளடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதனை உடனடி கவனத்தில் எடுக்குமாறும் அரச வைத்தியஅதிகாரிகள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையினர் கோரிக்வை விடுத்துள்ளார்கள்.
