Saturday, December 27, 2025
HomeMULLAITIVUசிறுமி உயிரிழப்பு நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு!

சிறுமி உயிரிழப்பு நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 12 அகவை சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் கடந்த 21.12.2025 அன்று நடைபெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவலையீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும் இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தரவேண்டும் இனியும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதையும் வலியுறுத்தி சிலாவத்தை மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 29.12.2025 திங்கட் கிழமை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளார்கள்.


இந்த போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கம் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
குகநேசன் டினோஜாவின் உயிரிழப்பிற்கு நீதி விசாரணை கோரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் மருத்துவமனையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான இழப்புக்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தினை வலியுறுத்தும் போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments