பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!
கடந்த வாரம் பெய்த கடும்மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புலம் பெயர் தமிழர்களும்,அமைப்புக்களும் வெள்ள நிவாரண உதவிகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் கடந்த 01.12.24 அன்று யாழ்மாவட்டம் பருத்தித்துறை,கற்கோவளம்,பழைய புனிதநகர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பழைய புனிதநகர் கிராமத்தில் மழைவெள்ளத்தினால் நிர்கதியான 25 குடும்பங்கள் இனம் காணப்பட்டு விடிவெள்ளி கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக அவுஸ்ரேலியாவில் உள்ள வன்னியின் கண்ணீர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.