முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(27) இரவு பெய்த கடும் மழை காற்றினால் பல வீதிகளின் குறுக்கே பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் இரண்டு இடங்களில் முறிந்து வீழ்ந்த பாரியமரத்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது நெடுங்கேணி 17ஆம் கட்டைப்பகுதியில் விழுந்த மரம் உடன் அகற்றப்பட்டுள்ளதுடன் கோடாலிக்கல்லு குளத்திற்கு அருகில் விழுந்த பாரிய மரம் இன்று (28) நண்பகலுடன் அகற்றப்பட்டுள்ளது
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினரின் பங்களிப்புடன் குறித்த மரம் அகற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஊழியர்களும் உடனுக்குடன் விழுந்த மரங்களை வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.மல்லிகைத்தீவு,மூங்கிலாறு,தேராவில் பகுதிகளில் விழுந்தமரங்கள் உடனடியாக செயற்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையினால் நிலம் ஊறிகாணப்படுகின்றது பலமான காற்றுவீசுமாக இருந்தால் மேலும் பல மரங்கள் சரிந்து வீழும் அபாயம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட திணைக்கள ஊழியர்களுக்கும் நடவடிக்கையில் நின்ற அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேவைகள் தொடரட்டும்