வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முன்னாள் லூசியா விளையாட்டுக்கழகத்தின் 75ம் ஆண்டு நிறைவு விழாவும், மறைந்த வீரர்களின் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் இன்று 20.10.2024 இடம்பெற்றிருந்தது.
40 வயதிற்கு மேற்பட்ட வடமாகாணத்தை சேர்ந்த சிரேஸ்ட வீரர்களுக்கிடையிலே இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக சமூக செயற்பாட்டாளரும் வன்னி தேர்தல் தொகுதி சுயேட்சைக்குழு 07 இல் கொடாரிசின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அன்ரனி எமில் லக்ஷ்மி காந்தன் (எமில் காந்தன்) கலந்து சிறப்பித்துள்ளார்
இந்நிகழ்வில் விளையாட்டு கழக உறுப்பினர்கள், வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
எருக்கலம்பிட்டி லிஜன்ட் விளையாட்டுக்கழகத்துக்கும் பள்ளிமுனை சென்.லூசியாஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் இடம்பெற்ற இவ் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியிலே எருக்கலம்பிட்டி லிஜன்ட் விளையாட்டுக்கழகம் 1 க்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று சாம்பியன் கின்னத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.