தமிழர் மரபுரிமை கட்சி வேட்பாளர் நே.சங்கீதன் தனது கட்சி கொள்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
வன்னி தேர்தல் தொகுதியில் மாட்டுவண்டில் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை வேட்பாளர் நேசராசா சங்கீதன் அரசியல் நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இளைஞர்களையும் மையப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டு அரசியலை கொண்டுசெல்ல தமிழர் மரபுரிமை கட்சியாகிய எங்கள் கட்சி தயாராகி வருகின்றது கடந்த காலத்தில் விட்ட அரசியல் பிழைகளால் இன்று இளைஞர்கள் மக்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின் எங்கள் தமிழ் அரசியல் வாதிகளை நம்பி எமது மக்கள் ஏமாந்தது ஏராளம் வீதிகளில் இறங்கி போராடியது பலதடவை எங்களுக்கு தீர்வு வரும் என்று எங்கள் தமிழ் அரசியல் வாதிகள் நம்பி ஏமாந்து விட்டோம் இனியும் ஏமாறுவதற்கு நாங்கள் தயார் இல்லை அடுத்த தலைமுறையாகிய நாங்களும் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்காமல் போவதற்கு தயாராக இல்லை.
இன்று ஒரு இளம் தலைமுறையினர் அடுத்த தலைமுறையினை எதிர்கொள்ள தயாராக இருந்தபோதும் அரசியல் ரீதியாக சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம் பேருக்கு பின்னர் எம்மக்கள் எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே மக்கள் இருந்து வருகின்றார்கள்.
எங்கள் மக்களின் காணிகளோ,அல்லது உரிமையோ இன்றுவரை சரியான முறையில் கிடைக்கவில்லை
கடந்த 2016 ஆம் ஆண்டு சுயேட்சை அணியாக பிரதேச சபை தேர்தலை எதிர்கொண்டோம் இன்றும் எங்கள் ஒரோ நேர்கோட்டு பாதையில் மக்களுக்கான பணிகளை செய்துவருகின்றோம். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சோரம் போகாமல் தனித்துவமாக மக்களின் நலனுக்காக தமிழர் மரபுரிமை கட்சி இயங்கி வருகின்றது.
இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அரசியல் வரலாற்றுரீதியாக கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே எங்கள் அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை தேர்தல் மாட்டுவண்டி சின்னத்தில் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்கின்றோம் இளம் தலைமைத்துவத்தினை கொண்டவர்கள் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கும் எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள் 15 ஆண்டுகளாக விட்ட பிளையினை இந்த வருடம் விடாதீர்கள் 15 ஆண்டுகளா 2009 ஆம் ஆண்டு விட்ட இடத்தில்தான் நிக்கின்றோம்.
மக்களின் அபிவிருத்தி உரிமைசார் பிரச்சினைகள் எவ்வளவு காலமாக தீர்க்கப்படமால் இருக்கின்றது என்பதை சிந்தியுங்கள்
போரால் பாதிக்கப்பட்ட யாராவது அல்லது மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் யாராவது நாடாளுமன்றத்திற்கு செல்கின்றார்களா? அப்படி செல்லாவிட்டால் மக்களின் வலியும் உணவுர்களும் எப்படி தெரியும் அவர்கள் எவ்வாறு கதைப்பார்கள் உணர்வுகளை பற்றி.
அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இங்கு வந்து வாக்கு கேட்கின்றார்கள் வலியினையும் வேதனையும் கொடுத்த எங்களுக்குத்தான் தெரியும் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்டாமல் இருப்பதற்கு காரணம் பழைய அரசியல் வாதிகள்தான்.
இன்று அவர்கள் சொல்லி உள்ளார்கள் தென்னிலங்கையில் இருந்து சுயேட்சைக்குழுக்களை இறக்கிஇருக்கின்றார்கள் என்று. அவ்வாறு இல்லை எங்களுக்கும் அங்கிகாரத்தினை தமிழ்தேசிய கட்சிகள் வழங்கி இருந்தால் இன்று இளைஞர் அணிகளாக தேவை இருந்திருக்காது.
மக்களின் நலன் கருத்து இன்று இளைஞர்கள் அணியாக திரண்டுள்ளார்கள்.
இன்று பல தமிழ் கட்சிகள் இருக்கின்றன 60 வயதுவரையும் தேர்தல் கேட்கின்றார்கள் கட்சி தலைமைபொறுப்பில் இருந்து விலகுகின்றார்கள் இல்லை அவர்களுக்க பதவி ஆசையும் மோகமும்தான்.
அவர்கள் ஒதுங்கி அடுத்த தலைமுறைக்கு இடம் கொடுத்திருந்தால் இன்று நாங்கள் தனித்துவமாக போட்டியிடவேண்டிய தேவை வந்திருக்காது சுயேட்சைக்குழு தொடர்பில் சும்மா ஒரு விம்பத்தினை உருவாக்கி விடுகின்றார்கள்
தென்னிலங்கை அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலர் எங்களிடம் கதைத்தார்கள் சீற் தருகின்றோம் என்று கேட்டார்கள் அதுவல்ல எங்களுக்கு எங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய தேவை இருக்கின்றது தென்னிலங்கை அரசுடன் இணைந்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லாத நிலையில் சுயமாக நாங்கள் நிக்கின்றோம் நாங்கள் தமிழர் மரபுரிமை கட்சி என்று பெயரினை வைத்து வண்டில் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் உங்கள் வாக்கினை எங்களுக்கு அளியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.