தங்கள் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேப்பாபிலவு மக்கள் புதிய ஐனாதிபதி அனுரகுமார திஸ்சநாயக்காவிடம் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
கேப்பாபிலவு மக்கள் தங்கள் சொந்த காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் 74 குடும்பங்களை சேர்ந்த 59.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
இந்த பகுதியில் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்ன மரங்கள் காய்த்துக்கொண்டிருக்கின்றது இதில் வரும் வருமானத்தினை 16 ஆண்டுகளாக இராணுவத்தினர் எடுத்து வருகின்றார்கள்.இந்த வருமானம் எங்கு செல்கின்றது என்பது தெரியவேண்டும் வரவு செலவு திட்டத்தில் இராணுவத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அதிபர் செலவீனங்களை குறைத்து வரும் நிலையில் எங்கள் வருமானங்களை இராணுவத்தினர் பெற்று வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் எங்கள் நிலம் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகமாக காணப்பட்ட நிலையில் தற்போது 59 ஆவது படைப்பிரிவு என்ற குறுகிய இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள்.
இந்த காணிக்குள் பொதுச்சொத்தாக பாடசாலை,பொதுநோக்கு மண்டபம்,கூட்டுறவு சங்கம்,ஆலயம்,சுடலை, என்பன காணப்படுகின்றது.
இறுதியாக ரணில் விக்கிரமசிங்கவினை புதுக்குடியிருப்பில் வைத்து நாங்கள் நேரடியாக கேட்டபோது காணியினை விடுவித்துதான் ஐனாதிபதி தேர்தல் நடக்கும் என்று சொன்னார்கள் காணிவிடுவிப்பு விடையம் டக்ளஸ் தேவானந்தாவின் கையில் கொடுத்துள்ளதாகவும் நாங்கள் அறிந்தோம்
தயவு செய்து எங்களின் புது ஐனாதிபதியான அனுரகுமார திஸ்நாயக்க அவர்கள் நல்லை செய்கின்றார்கள் ஐனாதிபதி தேர்தலுடன் உங்கள் விடையங்கள் முடியவில்லை தொடர்ந்தும் நாங்கள் கேப்பாபிலவு மக்களின் காணிகளை நீங்கள் விடுவித்து தந்தால் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறவைப்போம்.
நாங்கள் இன்னும் எங்கள் சொந்த இடங்களில் சந்தோசமாக வாழவில்லை புதிய ஐனாதிபதி எங்கள் விடையத்தினையும் தீர்த்து தரவேண்டும்
எங்கள் கால்நடைகள்கூட மேச்சல் தரவை இல்லாத நிலையில் பாரியளவிலான நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றார்கள்.
கால்நடையினை நம்பி வாழும் நாங்கள் எங்கள் இடங்களை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை விரைவில் வடமாகாண ஆளுனர் ஊடாக ஐனாதிபதியிடம் எழுத்து மூலம் கையளிக்கவுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.