Monday, April 28, 2025
HomeUncategorizedபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு தொடரும் அநீதி ! 

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு தொடரும் அநீதி ! 

அதிகளவான பேருந்துகள் பயணம் செய்யும் ஏ9 வீதியில் பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத கதை தொடர்கதையாக இருக்கும் நிலையில் இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டும் இன்றுவரை பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு காரணமாக மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்ல முடியாது தவிக்கின்றனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம்,கிழவன்குளம்,திருமுறிகண்டி பகுதிகளை  சேர்ந்த  பாடசாலை மாணவர்கள் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்

இவர்கள் ஏ 9 வீதியில் அதிகளவான பேருந்துகள் சென்றும் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத நிலை தொடர்கிறது 

இந்த விடயமாக கிராம மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய நிலையில் நடவடிக்கைகள் எடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் 

இதன் பின்னணியில் சிறிது காலம் மாணவர்களை பேருந்துகள் உரிய வகையில் ஏற்றி சென்றிருநதன இருப்பினும் தற்போது பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்ற நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் 

ஒரு சில அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் மாணவர்களல் அக்கறை கொண்டு அவர்களை ஏற்றி சென்றாலும் அதிகளவான பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்ற நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கபபடுகின்றனர்

இதேபோன்று ஏ9 வீதியில் பல இடங்களில் இருந்தும் பாடசாலை செல்லும் மாணவர்கள் குறிப்பாக முகமாலை , மன்னகுளம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நிலை தொடர்கிறது 

இலங்கை போக்குவரத்து சபை வடக்கு அதிகாரிகள் இந்த விடயத்தில் அசமந்தபோக்கு டன் செயற்ப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கினறனர்

இந்த விடயமாக புதிய ஜனாதிபதி, புதிதாக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்க தவறின் ஏ9 வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments