முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 அகவை சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 04.10.2024 இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த அபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிதரிழந்துள்ளார்.
வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிறுவன் இவ்வாறான விபரீத முடிவுவெடுத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது சிறுவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.