இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்திற்காக இந்திய ஐனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை லைக்கா புரடக்ஸனின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவரும் உலகின் தொழிலதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 70 ஆவது தேசிய திரைப்பட விழா விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது
அதாவது 2022 ஆம் ஆண்டு வெளியான கடங்களுக்கான விருதுகள் 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது
தமிழில் பொன்னியின் செல்வன் படம் நான்கு தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளது.
கல்கியின் நாவலை கொண்டு மணிரத்தினம் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கி இருந்தார் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருந்தது இந்த படம் இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படம் என்ற பெருமையினை அள்ளிச்சென்றுள்ளது.
இப் படத்தின் இயக்குனர் மனிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கர் ஆகியோருக்கும் தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சிறந்த இசையமைப்பிற்காக இசையமைப்பாளர் விருதினை ஏ.ஆர்.ரகுமான் அவர்களும் சிறந்த வடிவமைப்புக்கான விருதினை ஆனந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 70 ஆவது தேசிய விருது விழாவில் பொன்னியின் செல்வன் படம் அதிக விருதிகளை அள்ளிக்குவித்துள்ளது இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரமாக தமிழ் ரசிகர்களால் பார்க்கப்படுகின்றது.
