இலங்கையில் சூடுபிடிக்கும் தேர்தல் யாழில் 22சுயேட்சைக்குழுக்கள் உள்ளிட்ட 246 சுயேட்சைகுழுக்கள்!
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை அதிகளவிலான மக்கள் மற்றம் ஒன்றினை விரும்பிய மக்களாக காணப்படுகின்றார்கள் பழைய முகங்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப விருப்பம் கொள்ளாத மக்ககள் கட்சிகளின் முகங்களை விடுத்து புதியவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மனநிலையில் காணப்படுகின்றார்கள்.
வாக்கு உங்கள் ஒவ்வொருவர்களின் உரிமை கடந்த காலங்களை உணர்ந்து எதிர்காத்தின் உங்கள் பிரதிநிதிகளை நீங்கள் தெரிவுசெய்ய வாக்களியுங்கள்
இன்னிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் இடம்பெறுகின்றன.
வடக்கில் தமிழர்களின் வாக்குகள் இம்முறை கட்சிகளுகாக அல்லது சுயேட்சைக்குழுக்களுக்காக என்ற நிலையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் மாத்திரம் இதுவரை 22 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் வன்னி தேர்தல் தொகுதியான முல்லைத்தீவு,கிளிநொச்சி,மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி இதுவரை 21 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதுடன்
நாடளாவியரீதியில் இதுவரை 246 சுயேட்சைக்குழுங்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் மூன்று அரசியல் கட்சிகளும் வன்னியில் இரண்டு அரசியல் கட்சிகளும் இன்றுவரை 09.10.02024 வரை கட்டுப்பணங்களை கட்டியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.