வித்தியானந்தா கல்லூரியில் அச்சுறுத்தப்பட்ட ஆசிரியர்-வள்வெட்டுகுழுவா?

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஒரு தேசிய பாடசாலையாகும் இந்த பாடசாலையில் படித்த பலர் அரச உத்தியோகத்தில் பல சமூக சேவைகளை செய்து வருகின்றார்கள்.
நாட்டிற்கும் மாவட்டத்திற்கும் புலம்பெயர்ந்த பல புத்திஜீவிகளை உருவாக்கிய ஒரு தேசியா பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே ஆசிரியர் ஒருவரின் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தி அவரின் உடமைகள் தீயிட்டு எரிக்கப்பட்ட துயர சம்பவம் ஒன்று 07.10.2024 அன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தினை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது.
இதற்கு முன்னர் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் ஒருவர் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் தனது முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்.
இந்தசம்பவத்தினை உற்றுநோக்கும் போது உயர்தர மாணவர்களுக்கும் (ஒருசிலருக்குமாத்திரம்) கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றமையினை உணரமுடிகின்றது.

அதனை விட ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவர்களும் பாதிக்கப்ட்ட சம்பவம் பாடசாலையில் பதிவாகி இருக்கின்றது.
ஒரு நல்ல கல்விசமூகத்தினை ஆசிரியர்கள்தான் உருவாக்கவேண்டும்

மாணவர்களின் கையில் வாள்கள் போன்ற வன்முறையினை தூண்டவைப்பதற்கான காரணத்தினையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
மாணவர்கள் சிலர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க முடியாத நிலையில் இவ்வாற வன்முறையினை கையில் எடுத்துள்ளமை நல்ல எண்ணமாக தோன்றவில்லை

இருந்தும் மாணவர்களை நல்வளிப்படுத்துவற்கு பல வழிகள் உள்ளன அவ்வாறன வழிகள் ஊடாக குறிப்பிட்ட மாணவர்களை நல்வளிப்படுத்தலாம்.
முள்ளியவளை பிரதேசம் பல்வேறு சமூகங்களை கொண்டு வாழ்கின்ற பிரதேசம் ஒருசில மாணவர்களின் இவ்வாறான செயற்பாட்டினால் ஏனைய மாணவர்களும் பாதிப்பினை எதிர்கொள்ளநேரிடும்.

ஆனால் வள்வெட்டுகுழு உள்ளிட்ட பல்வேறு வன்முறையினை செய்யக்கூடிய வல்லவர்கள் கொண்ட பிரதேசமும் முள்ளியவளை பிரதேசம் என்பதை இவ்வாறன சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் சட்டத்தினை கையில் எடுப்பவர்களுக்கு இவர்கள் யார் இவர்களின் பின்னணி என்ன என்பது முழுமையாக தெரியும் அவ்வாறு தெரிந்தும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி

இப்படிப்பட்டவர்கள் சட்டத்தினை கையில் எடுக்கும் திணைக்கள அதிகாரிகளுக்கு தேவைப்படுபவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வித்தியானந்த கால்லூரி என்றால் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளில் ஒரு நல் மதிப்பு இன்றும் இருந்து வருகின்றது.
இவ்வாறு பாடசாலையில் காணப்படும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையில் உள்ளமுரண்பாடுகள் நீக்கப்பட பாடசாலையில் பழைய மாணவர் சங்கம்,அல்லது அபிவிருத்தி சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது

அபிவிருத்தி என்றால் முன்னிற்கும் பழையமாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் ஒரு ஆசிரியரின் பாதுகாப்பிலோ அல்லது ஒரு சிறந்த மாணவனை உருவாக்கும் செயற்பாட்டிலோ ஏன் ஈடுபடவில்லை?

இவ்வாறான நிலை முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் தொடர்ந்தால் மாணவர்கள் குழுக்களாக மாறும் செயல்பாடு தலைதூக்கும்
ஏன் என்றால் ஆசிரியர்களின் பாடசாலைக்கு வெளியான செயற்பாடுகள் அனைத்தும் மணவர்கள் அறிந்தவர்கள்
இவ்வாறன மாணவர்களை சமூகத்திற்கு நன்மைபயக்ககூடிய வகையில் மாற்ற வித்தியானந்தா கல்லூரியில் கல்வி சமூகம் முன்வரவேண்டும்.
வெளிமாவட்டத்தில் இருந்து வரும் ஆசிரியர்களின் நிiலை?

இன்று குறிப்பாக வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து பணியாற்றும் பல அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள் கஸ்ரப்பட்ட பிரதேசமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதால் அவர்கள் தங்கள் முதல் கடமையினை இவ்வாறான மாவட்டத்திற்கு ஆற்றவேண்டிய நிலைக்கு ; தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் அவர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்துவதுடன் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்து இந்த மாவட்டத்தினையும் அதில் உள்ள மாணவர்களையும் ஒரு சிறந்த புத்திஜீவிகளாக மாற்றவேண்டிய கல்வி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்

இவ்வாறன நிலையில் இந்த வெளிமாவட்ட ஆசிரியர்களின் மனநிலை அவர்களின் சிறந்த அற்பணிப்புடனான சேவையினை புரிந்துகொள்ளவேண்டும்.
சட்டம் தன் நடவடிக்கையினை செய்தாலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு நல்லுறவினை வளர்க்க முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் இருந்து வெளியேறிய புத்திஜீவிகள்,சமூக அக்கறையாளர்கள் செயற்படவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

Admin Avatar