புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கில் நகைக்கடை ஒன்றுக்குள் புகுந்து சேதத்தினையும் விபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
19.10.2024 புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பரந்தன் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதி நோக்கி வேகமாக பயணித்த சிறியரக உந்துருளி ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து நகைக்கடை ஒன்றுக்கள் புகுந்துகொண்டதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்போது நகைக்கடையும் சேதமடைந்துள்ளது இந்த விபத்தில் காயமடைந்தவர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
காயமடைந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.