Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Latest post

முல்லைத்தீவு பரந்தன்வீதியில் விபத்துஇளைஞன்பலி-மாடுகளை மோதி தள்ளிய மோட்டார்சைக்கில்!

கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று (09.05.23) அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் சிறு காயங்களுக்குள்ளானார்.சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன. 18 வயதுடைய புளியம்பக்கடை பகுதியைச்…

ஏமன் நாடு வைத்த ‘மொச்சா’ புயல் முல்லைத்தீவிற்கு தாக்கம் வருமா!

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நாளை (08.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அன்றைய தினமே இது புயலாக மாற்றம் பெறும். இப்புயலுக்கு ஏமன் நாட்டின் பெயரான…

ஒட்டுசுட்டானில் இறைச்சிவைத்திருந்த குற்றச்சட்டில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் இறைச்சியினை விற்பனை செய்யும் நோக்கில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் வைத்திருந்த நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசாரால் 04.05.23 இன்று கைதுசெய்துள்ளார்கள். பண்டாரவன்னி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் 95 கிலோ மாட்டு இறச்சியும் 05 கிலோ பன்றி இறச்சியும் வைத்திருந்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்த இறச்சி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக…

முல்லைத்தீவில் கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல்  இடம்பெற்று  வரும் நிலையில்  இன்றையதினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள்  இடம்பெற்றது. இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை…

நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணி தாரை வார்க்கப்படுமா?

4 ஆவது படைப்பிரிவுக்கு காணி சுவீகரிப்பு! அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கை! நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணி தாரைவார்க்கப்படுமா? முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரி…

புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது!

புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தென்பகுதியான கொழும்பினை சேர்ந்த நான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் இந்த சம்பமவ் 02.05.23 அன்று இடம்;பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பில் பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிணக்கு காணப்பட்ட நிலையில் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக ஆள் ஒருவரை கடத்தி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சந்தேகத்தின் பேரில்…

அரசபேருந்துக்கள் இனி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் அதிகாரி உறுதி!

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம் தொடர்பில்  இனிவரும் காலங்களில்  இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட  இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில்  பிராந்திய முகாமையாளர் (செயலாற்றல்) அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் இது விடயமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி…

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்வவம் இன்று 01.05.23 இடம்பெற்றுள்ளது.கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற…

யாழில் விபத்து மோட்டார்சைக்கிலில் பயணித்த இரு பெண்களும் சம்பவ இடத்தில் பலி

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டியில் கார் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 01.05.23 காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே மோட்டார் சைக்கிளில் பயணித்தனர்…

தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றுவருகிறது   குறித்த மேதின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு…