27.01.2026 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60வரையான காணி உரிமையாளர்களுக்கு எமதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள தேவிபுரம்,அ.,ஆ.பகுதி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு எதிராகவும்,காணிப்பகுதி உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது மனுவினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களிடம்கையளித்துள்ளார்கள்.
இந்த மக்கள் அரசாங்கத்தினால் அரை ஏக்கர் காணி கொடுத்தார்கள் அதற்குள் வீடும் தென்னப்பிள்ளையும் வைக்க காணிமுடிந்துள்ளது.
இந்த நிலையில் எங்களின் வாழ்வாதரத்திற்காக எங்கள் காணியுடன் அல்லது அருகில் உள்ள மந்துக்காடாக கிடந்த காணிகளை சீர்செய்து துப்பரவு செய்து எங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்வதற்காக சீர்செய்து பயிர்கொடிகளை நாட்டிவைத்துள்ளோம் வான்பயிர் செய்துள்ளோம் மரமுந்திரிகை செய்துள்ளோம்
இந்த நிலையில் இந்த காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரதேச செயலகத்தினால் அ. படிவம் ஒட்டப்பட்டுள்ளது இந்த நிலையில் எம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சிலர் 15 ஏக்கர் வரையில் காணியினை பிடித்து ஆவணம் போட்டுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஏழைமக்களை கருத்தில் எடுக்கவில்லை இது தொடர்பில் மாவட்ட அரசாங்கஅதிபருடன் கதைத்துள்ளோம் காணி ஆணையாளரிடம் கதைத்துள்ளோம் இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம் ஜனாதிபதி செயலத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம் இதுவரையும் எந்த பதிலும் இல்லை இந்த நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த காணிப்பிரச்சினை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் அவர்கள் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போது
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு உட்பட்ட கோம்பாவில் தேவிபுரம்,சுதந்திரபுரம் போன்ற மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் மிக அதிகமாக அரச காடுகளை வெட்டிகாணிகளை அடத்தாக பிடிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
போர்காலத்திற்கு முதல்அல்லது கடந்தகாலத்தில் கொடுக்கப்பட்ட அரசாங்கத்தினால் சட்டரீதியாக கொடுக்கப்பட்ட காணிகளோ அல்லது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளுக்கும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கவில்லை மக்களின் பளைய காணிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் அடத்தான முறையில் காணியினை கையகப்படுத்தி பாவித்து வருகின்றார்கள் ஒரு ஏக்கர் தொடக்கம் 37 ஏக்கர் வரை தனிநபர்கள் இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.
இதில் அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் வியாபாரிகள் இருக்கின்றார்கள் மணல் விற்பனை செய்பவர்கள் இருக்கின்றார்கள் சமூகமட்ட அமைப்புக்களில் உள்ளவர்கள்இருக்கின்றார்கள் சில ஏழைகளும் இருக்கின்றார்கள் அவர்களை நாங்கள் அழைத்து கதைத்தவேளை அனைவருக்கும் ஏற்கனவே வேறு காணிகளுக்கு போமிட் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே ஏற்கனவே காணிகள் வைத்திருக்கும் நபர்கள் மேலதிகமாக காணியினை பிடித்து வைத்திருக்கின்றார்கள் ஒரு நபர் ஏதும் காணியில்லாமல் நாங்கள் இதில் குடியிருக்கின்றோம் என்று சொல்லவில்லை
இவ்வாறானவர்கள் அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1700 நபர்கள் இதுவரைக்கும் காணி இல்லாத மக்கள் இருக்கின்றார்கள் அத்துடன் நாங்கள் முதலீட்டினை ஊக்கிவிக்கின்றோம் பிரதேசத்தில் பலர் வேலை இல்லாத நிலை காணப்படுகின்றது
கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணத்திற்கு,வேலைக்கு செல்கின்றார்கள் நாங்கள் முதலீட்டிற்காக ஊக்கிவிக்கின்றோம் யாராவது முதலீடு செய்யுங்கள் என்று காணிகளை அடையாளப்படுத்தியுள்ளோம் அந்த காணிகளையும் பிடிக்கின்றார்கள் எல்லோருக்கும் வாழ்வாதாரம் என்று காணிகளை கொடுப்பதாக இருந்தால் மொத்த காட்டினை துப்பரவு செய்தாலும் காணாது தொழில் முயற்சியாளர்களுகம்கும் காணி இல்லாமல் விண்ணப்பம் செய்த மக்களுக்கும் காணிகொடுக்கவேண்டிய தேவை உள்ளது
இதுவரைக்கும் 66 வழக்குகள் போடப்பட்டுள்ளது நான்கு வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்னும் அதிகளவான காணிகளை வெட்டிவைத்துள்ள நபர்கள் இன்னும் 100 வழக்குதாக்கல் செய்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எந்த ஒரு குடிமகனும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

