முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகியஇரு பிரதேச மக்களின் அரச சேவையான மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளும் இடமாக மல்லாவி ஆதார மருத்துவமனை காணப்படுகின்றது
இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் பாதை புனரமைப்பு செய்யப்படாமையினால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையானது அதிகஸ்ட பகுதிகளுக்கு சேவையாற்றும் ஒரு இடைநிலை ஆதார வைத்தியசாலையாகும்
குறித்த பகுதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களின் போது உயிரிழப்புகள் ஏற்படின் மல்லாவி வைத்திய சாலையிலேயே உடலம் வைக்கப்படுவது வழமை
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகாலமாக வைத்தியசாலையில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும் ,இதனால் உடலங்களை தள்ளுவண்டிகள் மூலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லும் போது சீரற்ற பாதையினால் அரச பணியாளர்கள் உள்pட்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அசௌகரியனகளை எதிர் கொள்வதாகவும் தெரிவித்தனர்
மருத்துவமனையிலிருந்து 100ஆ மீட்டார் தூரத்தில் உள்ள குறித்த பிரேத அறை உள்ள வீதியினை மருத்தவமனை நிர்வாகமோ அல்லது நோயாளார் நலன்புரி சங்கமோ புனரமைப்பு செய்வதில் அக்கறை காட்டவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி பிரேத அறை!
RELATED ARTICLES
