முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த சிவராசா றாஜ்உமோஸ் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடத்தின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவருக்கான பாராட்டு விழா 18.01.2026 அன்று புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
ஆனந்தபுரம் ஆ.த.க பாடசாலையின் அதிபர் திரு.மகேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆனந்தபுரம் கிஸ்ணர் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து முதன் முதலாக பேராசிரியராக தெரிவாகியுள்ள இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலையில் ஆரம்ப கல்வியினையும் பின்னர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலும் கல்வி கற்று பல்கலைக்கு தெரிவானார் இந்த நிலையில் இவர் இந்த ஆண்டு யாழ்பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பதவிஉயர்வு பெற்றுள்ளார்.
இவருக்கான பாராட்டு நிகழ்வின் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் கல்வித்துறைசார் அதிகாரிகள்,அதிபர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த புத்திஜீவிகள்,சட்டத்தரணி, ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்ட நிழக்வில் பேராசிரியர் சிவராசா றாஜ்உமோஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து மடல்களையும் வழங்கிவைத்துள்ளார்கள்.
இந்த நிகழ்வின் போது ஒரு தொகுதி பாடசாலைமாணவர்களுக்க கற்றல் உபகரணங்களும் ஏற்பாட்டுக்குழுவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.



