Saturday, January 17, 2026
HomeMULLAITIVUமுல்லைத்தீவில் யானைதாக்கியதில் வயல் காவலில் ஈடுபட்ட இளைஞன் பலி!

முல்லைத்தீவில் யானைதாக்கியதில் வயல் காவலில் ஈடுபட்ட இளைஞன் பலி!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை விட்டு தப்பிஓடிய நிலையில் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
19 அகவையுடைய தேறாங்கண்டல் பகுதியினை சேர்ந்த பொன்முடி சுயீவன் என்ன இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினை தொடர்ந்து சம்பவஇடத்திற்கு வந்த கிராமசேவையாளர் மற்றும் பொலீசார் உடலத்தினை மீட்டு மல்லாவி மருத்துவமனைகொண்டுசெல்லப்பட்டு பிரேத அறையில் உடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலீPசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

துணுக்காய் தேறாங்கண்டல் பகுதியில் விவசாய செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் காட்டுயானைகளினால் தங்கள் விவசாய செய்கைகள் சேதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments