மக்களின் உரிமைக்காக நாங்கள் அறவளியில் தொடர்ந்து போராடுவோம் த.அமலன்!

0 54

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் சார்புடைய தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பொலீசாரால் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


கரைதுறைப்பற்று,புதுக்குடியிருப்பு,துணுக்காய்பிரதேச சபையின் உறுப்பினர்கள் அவர்கள் வாழ்இடபிரதேச பொலீசாரால் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் த.அமலன் அவர்கள் ஒட்டுசுட்டான் பொலீசாரால் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்


மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் மக்களின்உரிமைகள் சார்ந்த போராட்டங்களுக்கு மக்கள் அழைப்பு விடும் போதும் போராட்டங்களில் கலந்துகொள்ளவேண்டிய தேவை மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளன அறவளியில் போராட இந்த நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு தொடர்ந்தும் நாங்கள் எங்கள் உரிமையினை மீட்க போராடுவோம் என்றும் த.அமலன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.