மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

0 8

​மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்மோர் கல்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரகு என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியாவிலிருந்து காட்மோர் நோக்கிச் பயணித்த தனியார் பஸ் ஒன்றுக்கு, காட்மோர் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர் பிரவுன்ஸ்விக் பகுதியில் வைத்து இடம் கொடுக்க முற்படுகையில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து படுகாயமடைந்த குறித்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம் மஸ்கெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து படுகாயமடைந்த குறித்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.