முல்லைத்தீவு – படப்பிடிப்பு துறையின் வேர்களாக இருந்த கலைஞர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1968 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் ;படபிடிப்பாளர்களாக செயற்பட்ட முதுபெரும் படப்பிடிப்பாளர்களை முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர்கள் கூட்டுறவு  சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும்,  கடந்த 18.03.2024 அன்று ; ;  புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில்  நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் சி.குகநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிகழ்வில் பிரதம விருந்தினராக புஸ்பராணி புவனேஸ்வரன் கூடட்டுறவு அபிவிருத்தி  உதவி ஆணையாளர் முல்லைத்தீவு, கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன், மற்றும் வவுனியா மாவட்ட புகைப்பட பிடிப்பாளர்கள் சங்க தலைவர்,யாழ்மாவட்ட புகைப்பட பிடிப்பாளர்கள் சங்க செயலாளர்,கிளிநொச்சி மாவட்ட புகைப்பட பிடிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்ட  படப்பிடிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புகைப்படதுறையில் கால்பதித்து மறைந்த புகைப்பட கலைஞர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி வணக்கம் செலுத்தியதை தொடர்நது வரவேற்று நடனம் இடம்பெற்று

தொடர்ந்து 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் படப்பிடிப்பு துறை நவீனமயமாக்கப்படாத (டியிட்டல்) காலங்களில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பொதுமக்களின் மங்களகரமான நிகழ்வுகள்,துக்கநிகழ்வுகள்,ஆலய நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் பலவற்றை புகைப்படம் எடுத்து ஆவணமாக்கி படப்பிடிப்பாளர்களாக செயற்பட்டு  அன்றைய காலகட்டங்களில் புகைப்பட துறையில் தமக்கான முத்திரையினை பதித்த 17 புகைப்பட கலைஞர்களுக்கு கலைச்சுடர் என்ற விருதினையும் சான்றிதழினையும் முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

Admin Avatar