கண்ணகிபுரம் புன்னைநீராவி விசுவமடு பகுதிகளில் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் கத்திமுனையினை காட்டி செயின் பறித்து கொண்டு தப்பி செல்ல முற்பட்ட போது பிரதேச இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தர்ம அடிகொடுத்து முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று(15) இரவு இடம்பெற்றுள்ளது
பொன்னகர் கிராமத்தில் வீதியால் சென்ற குடும்ப பெண் ஒருவரின் கழுத்தில் ஈருந்த 4.5 பவுண் நெக்ளசினை கத்திமுனையில் அறுத்துக்கொண்டு தப்பிசெல்ல முற்பட்ட வேளை பிரதேச இளைஞர்கள் ஊர்மக்கள் ஒன்று திரண்டு இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இதன்போது தர்மபுரத்தினை சேர்ந்த இரத்தினம் உசாந்தன்,கண்ணகிநகர் புன்னைநீராவி விசுவமடுவினை சேர்ந்த கேதீஸ்வரன் சஜீவன் ஆகியோர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் பறித்து சென்ற தங்க நகை மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு சரியான சம்பவம் செய்யப்பட்டு முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இவர்களது உந்துருளியும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது
இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.