வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான மாணவிகளின் கரப்பந்தாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் முதலிடம் பிடித்து மூன்றாவது ஆண்டாக சாதனை படைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது மற்றும் 18 வயது பிரிவு மாணவிகளுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் கலைமகள் வித்தியாலய அணியினர் வடமாகாணத்தில் முதலிடம் பிடித்து பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி கடந்த 9ஆம்,10 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
16 வயது பிரிவு மாணவிகளுக்கிடையிலான போட்டியில் 37 அணிகளுடன் போட்டியிட்ட கலைமகள் வித்தியாலய மாணவிகள் இறுதியில் வற்றாப்பளை மகாவித்தியாலய அணியினை எதிர்கொண்டு வடமாகாணத்தில் கரப்பந்தாட்ட பெண்கள் அணியினர் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார்கள்.
18 வயது பிரிவு மாணவிகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட இறுதி போட்டியிலும் வற்றாப்பளை மகாவித்தியாலய அணியினை எதிர்கொண்டு வடமாகண கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்கள்.
இவ்வாறு வடமாகாணத்தில் ஒரு பாடசாலையில் இருந்து இரண்டு அணிகள் கரப்பந்தாட்ட போட்டியில் பங்கு பெற்றி மாகாணமட்டத்தில் முதலிடம் பிடித்த பெருமைக்குரிய பாடசாலையாக முள்ளியவளை கலைமகள் வித்தயாலம் காணப்படுகின்றது
கலைமகள் வித்தியாலய அதிபரின் வழிகாட்டுதலில் பாடசாலையின் விளையாட்டு பயிற்சி ஆசிரியர்களின் சரியான பயிற்சியில் மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள்






