முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு முதன்மை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(13) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.எதிர் எதிர் திசையில் வந்த மோட்டார்சைக்கில்களே விபத்தினை சந்தித்துள்ளன.
விபத்தின் போது ஒரு மோட்டர்சைக்கில் பயணித்தவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் மற்றை மோட்டார்சைக்கிலில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் படுகாயமடைந்த 37 அகவையுடைய வெள்ளப்பபள்ளம் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த சசிகரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் இந்த விபத்தில் 110 சி.சி. எஞ்சின் வலுகொண்ட மேர்டார் சைக்கில் ஒன்றும் 155 சி.சி எஞ்சின் வலுக்கொண்ட பெறுமதிமிக்க உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தரே இவ்வாறு மருத்துவமனை எடுத்துசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
அதிக பெறுமதியான உந்துருளி வீதியால் அதிவேகமாக பயணித்துள்ளதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
