முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் உடலம் ஒன்று இன்று(17) இனம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரின் உடலம் நீரில் மிதந்த நிலையில் இனங்காணப்பட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள்.
செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 54 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.