முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றம் தமிழரசு கட்சி மத்தியகுழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் வடமாகாண ஆளுனர் வேதநாயகம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
இந்த சந்திப்பு 18.07.25 யாழில் உள்ள வடமாகண ஆளுநர் அலுவலக்தில் நடைபெற்றுள்ளது
இந்த சந்திப்பின் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் ஊழியர் பற்றாக்குறை மற்றும் அபிவிருத்திக்கான நிதி பங்கீடு இயந்திரங்கள் பற்றாக்குறை தொடர்பிலும் வடமாகாண ஆளுனர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் ஊழியர் பற்றாக்குறை ஒருசில மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என ஆளுநர் இதன்போது தவிசாளரிடம் தெரிவித்துள்ளதுடன் ஏனைய தேவைகள் படிப்படியாக நிறைவேற்றி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
பிரதேச சபைக்கான வருமானத்தினை அதிகரிப்பது தொடர்பில் மக்களிடம் சேலைவரியினை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
