முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் 8ம் வட்டாரத்தில் விடுதலைப்புலிகள் காலத்தில் நிதிப்பிரிவினர் பயன்படுத்தியதாக கருதப்படும் பாரிய நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று கடந்த 09.07.25 ஆம் திகதி தோண்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தோண்டி பார்க்கப்பட்டு எந்த பொருட்களும் கிடைக்காத நிலையில் அது முற்றுமுழுதாக எவரும் பார்க்கமுடியாதவாறு மூடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
கடந்த காலங்களில் தென்னிலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள மக்களின் சுற்றுலா தளங்களில் முக்கியமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசம் அமைந்துள்ளது அங்கு தலைவர் பிரபாகரன் அவர்களின் நீச்சல் தொட்டி அவரின் இருப்பிடம் மற்றும் விடுதலைப்புலிகளின் சண்டை படகுகள்,ஆயுதங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன இருந்தும் விடுதலைப்புலிகளின் இவ்வாறான சாதனை தளபாடங்களை தேடி சிங்கள மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள் இந்த நிலையில் அவ்வாறான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து அவை திடீரென அகற்பப்பட்டு விட்டன இன்றும் சிங்கள மக்கள் இவ்வாறான இடங்களை தேடி வருகின்றார்கள் குறிப்பாக காட்டுப்பகுதிகளில் உள்ள விடுதலைப்புலிகளின் தளங்களை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்துஅதனை காட்சிப்பொருளாக காட்டினார்கள் ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை அங்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை
இந்த நிலையில் போரின் எச்சங்கள் என்று சொல்லப்படும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் போரின் எச்சங்கள் அற்ற நிலையில் அபிவிருத்தியினை நோக்கி நகர்கின்றது.
இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் விடுதலைப்புலிகள் வாழ்ந்த பகுதிகள் அவர்களின் முகாம்கள் ஆயுதங்கள்,படகுகள் போன்றவற்றை தேடிவந்து பார்வையிடுகின்றார்கள் அவர்களின் பார்வையில் எதுவும் காணக்கிடைப்பதில்லை இந்த நிலையில்தான் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியும் இந்த பாரிய பதுங்கு குழியினை எதிர்காலத்தில் எவரும் பார்வையிட கூடாது என்பதற்காக முற்றுமுழுதாக மூடியுள்ளார்.
தனியார் காணி ஒன்றில் காணப்படும் இந்த புதுக்கு குழிதொடர்பில் பார்வியிட்ட பல பொலீசார் விடுதலைப்புலிகள் புத்திசாலிகள் பாரிய குண்டுகளில் இருந்து தப்புவதற்காக இவ்வாறு திட்டமிட்டு இந்த நிலக்கீழ் பதுங்கு குழியினை அமைத்துள்ளார்கள் என புலம்பினார்கள்.
எதிர்காலத்தில் இந்த நிலக்கீழ் பங்கர் காணப்படுமாக இருந்தால் இதனை விடுதலைப்புலிகளின் சின்னமாக வெளி இடங்களில் இருந்து மக்கள் பார்வையிட வருவார்கள் என்ற சந்தேகத்தில் விடுதலைப்புலிகளின் தடையங்கள் எவற்றையும் துடைத்து எறியவேண்டும் என்ற நோக்கோடு செயற்பட்டவர்தான் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியாகும்.
இதற்கு முன்னர் பல இடங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விடுதலைப்புலிகளின் தங்கங்களையோ ஆயுதங்களையோ தேடி தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் தோண்டப்பட்ட இடத்தினைதான் மூடுவார்கள் ஆனால் இங்கு தோண்டப்பட்ட இடம் மூடப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே இருந்த பதுங்கு குழியின் வாயிலையும் மண்போட்டு மூடிவிட்டு சென்றுள்ளார்கள் எவரும் அதற்குள் செல்ல கூடாது என்று.
காணி உரிமையாளர்களின் கருத்து…
மீள்குடியேற்றம் செய்த காலத்தில் குறித்த காணியில் இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இருந்தார்கள் இராணுவத்தினால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே இந்த காணிக்கள் வந்து குடியேறினோம் அதன் பின்னர் வீட்டுத்திட்டம் வந்து வீடுகள் கட்டி வாழ்ந்துவந்துள்ளோம் இந்த பதுங்கு குழியின் கட்டிடத்தினை அகற்றி தருமாறு அரச அதிகாரிகளிடம் கோரினோம் அது நடக்கவில்லை இரும்பு வியாபாரிகள் வந்து இருப்புகள் கூட இங்கு பொறுக்கி சென்றார்கள் இந்த நிலையில்தான் இந்த விடுதலைப்புலிகளின் பாரிய பதுங்குகுழி பொலீசாரால் தோண்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
