Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் காட்டுயானைகளின் தொல்லை பல தென்னை மரங்கள் அழிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டுயானைகளால் மக்களின் பயன்தரு தென்னைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.தற்போது மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் யானைகளின் அட்டகாசம்கள் அதிகரித்துள்ளன.நெற்செய்கை விதைப்பு காலம் தொடங்கியுள்ளதால் கிராமங்களுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றதுஇந்த நிலையில் புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்திற்குள் புகுந்துகொண்ட காட்டுயானைகள் மக்களின் பயன்தரு தென்னைமரங்களை அழித்து நாசம் செய்துள்ளன. ஒரு பயனாளரின் 40 தென்னைகளை நாசம்…

முல்லைத்தீவில் ஒரு மத்திய பேருந்து நிலையம் இயங்கும் நடவடிக்கையில்!

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் முதலாம் கட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் இதுவரை…

யானை தாக்குதலுக்கு இலக்கான வயேதிபர் மருத்துவமனையில்!

ஒட்டுசுட்டான் மானுருவி பகுதியில்யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் மானுருவி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று 11.10.2023 இரவு இடம்பெற்றுள்ளது. இரவு வேளை வீதியால் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளையானை தாக்கியுள்ளது இதன்போது காயமடைந்த வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

தேராவில் கிராமத்தில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லாத நிலை  காணப்படுவதாக கிராம அபிவிருத்தி  சங்கம் தெரிவித்துள்ளது. தேராவில் கிராமத்தி;ல 347 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த நிலையில் புதிதாக பலர் திருமணம் செய்துகுடும்பங்களாக பதிவினை மேற்கொண்டு வந்துள்ளார்கள் இவ்வாறு கைக்குழந்தைகளுடன் வீடும் இல்லாதநிலையில்…

நீதிபதி தொடர்பில் பலரிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த சி.ஜ.டியினர்!

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சிஐடியினர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி…

வடக்கினை சேர்ந்த 67 பாடசாலைகளுக்கு தலா 1.5 இலட்சம் நிதி உதவி அவுஸ்ரேலியாவால் வழங்கிவைப்பு!

நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பாடசாலைகளுக்கு இந்த நிதி உதவியினை அவுஸ்ரேலியா மக்களின்…

ஐ.நா வில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்த ஏ.ஆர். ரகுமான்

கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள்,பெண்கள்,இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வேளையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் தமிழ் ஆரவலருமான திரு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்…

பணிக்கு திரும்பிய முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02.10.2023 அன்று   ஆரம்பித்த காலவரையறையின்றிய   தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 10.10.23 அன்று மாவட்ட சட்டத்தரணிகள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்துள்ளார். 09.10.23 அன்று நாடு தழுவிய…

மாலதியின் நினைவு நாள் முல்லைத்தீவில் அனுஸ்டிப்பு!

2ஆம் லெப் மாலதி 1987 அக்டோபர் 10 இல் கோப்பாய் கிறேசர் வீதியில் இந்தியப் படையுடன் நடந்த மோதலில் இறந்தார். இவரது நினைவுநாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நினைவு கூரப்பட்டுள்ளதுமாலதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளை கைவிடும் நிலை-மேச்சல் தரவை இன்மை,கால்நடை திருடர்கள் அதிகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாததால் கால்நடை வளர்பினை கைவிடும் நிலையில் பண்ணையாளர்கள் காணப்படும் அதேவேளை நகரப்புறங்களில் வீடுகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக திருடர்களால் திருப்படும் சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருவதால் இருக்கும் கால்நடைகளை விற்றுவிட்டு கால்நடை வளர்ப்பு வாழ்வாதாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின்…