அனுமதிபத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன!
அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் பறங்கியாற்று பகுதியில் மணலுடன் மூன்று உழவு இயந்திரங்கள் நேற்றைய தினம் மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளன
பாண்டியன்குளம் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து விதிமுறையை மீறி வேறோர் இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது
கைது செய்யப்பட்டுள்ள குறித்த மூன்று உழவு இயந்திரங்களும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதி மூவரும் போலீஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்தனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியிடங்களுக்கு மாந்தை கிழக்கு மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இருந்தும் மணல் வளங்கள் அகழப்பட்டு ஏற்றப்படுகின்றன என்று பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கத